Categories: Cinema News latest news

கீர்த்தி சுரேஷுக்கு என்னம்மா கோவம் வருது!.. ஜெயம் ரவி ஆக்டிங் செம!.. சைரன் 108 டிரெய்லர் தரம்!..

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் 108 திரைப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு ஜெயம் ரவி நடித்து சோலோவாக வெளியான இறைவன் மற்றும் அகிலம் உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தாலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதையும் படிங்க: மகள்களை பல வருடம் மறைத்து வைத்த ரஜினிகாந்த்!… மண்டோதரி முதல் ரஜினியை சீண்டிய ரகசியங்கள் வரை…

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சைரன் 108 படத்தை ரசிகர்களுக்காக கொடுக்க காத்திருக்கிறார் ஜெயம் ரவி. இல்ல அவருக்கு ஜோடியாக அனுப்பவும் பரமேஸ்வரன் நடித்துள்ளார். பிளாஷ் பேக்கில் எப்படியோ அவரை போட்டு தள்ளிடுவார்கள். அதற்காக ஜெயம் ரவி பழி வாங்குகிறாரா? அவரது மகளுக்கு ஏதாவது நடக்காமல் இருக்க தடுக்க கொலைகளை செய்கிறாரா? என டைலர் விறுவிறுப்பாக கட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷை கோர்த்து விட்டு ஜெயம் ரவி கொலைகளை செய்துவிட்டு எல்லா இடத்திலும் தான் செய்யவில்லை என சொல்லும் விதம் வெகுவாக ரசிகர்களை கவர்கிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

கண்டிப்பாக இந்த படம் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக சுரேஷை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தனது மிரட்டலான நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார். டிரைலரை போலவே படமும் விறுவிறுப்பாக இருந்தால் நிச்சயம் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 

 

Saranya M
Published by
Saranya M