×

சூடுபிடிக்கும் போதை மருந்து விவகாரம் - ஜெயம் ரவி பட நடிகை கைது

 

பாலிவுட்டுக்கு அடுத்து கன்னட திரையுலகில் போதை பொருள் புலங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவரின் நண்பர் ரவி என்பவர் போதை மருந்து பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின், ராகினியை விசாரனைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அவரின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அதன்பின் அவரை போலீசர் கைது செய்து அழைத்து சென்றனர். கன்னட திரையுலகில் 15க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்கள் போதை மருந்தை பயன்படுத்திருக்கலாம் எனவும், அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News