பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த ஜெயம் ரவி – வைரலாகும் ப்ரோமோ!

பிக்பாஸ் 4 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இதில் அடுத்தடுத்து யார் வெளியேருவார்கள் என்பதை விட யார் டைட்டில் வின்னர் என்பதை தெரிந்துகொள்வதற்கு தான் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
பெரும்பாலானோர் ஆரிக்கு தான் முழு ஆதரவு கொடுத்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த முறை டைட்டில் அவருக்கு தான் என மக்கள் ஒருமனதாக எப்போதோ முடிவெடுத்துவிட்டனர். ஆனால், விஜய் டிவி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது பிக்பாஸிற்கு மட்டும் தான் தெரியும். கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக நுழைந்து போட்டியாளர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...
#BiggBossTamil இல் இன்று.. #Day84 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3CHvfn20qa
— Vijay Television (@vijaytelevision) December 27, 2020