Categories: Cinema News latest news

அதுல ஒண்ணுமில்ல தூக்கி போட்ரு…. ரசிகர்களை கடுப்பேற்றிய ஜெயம் ரவியின் புதிய வீடியோ..

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலிருந்து உச்சம் தொட்டவர்கள் வெகுசிலரே அதில் ஜெயம் ரவியும் ஒருவர். முதல் படமான ஜெயம் எனும் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதுவரை ரவி என்று இருந்தவர் அதன் பிறகு ஜெயம் ரவியாக மாறினார். அதன்பிறகு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அவரது ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு புது முயற்சியை கையாளும் விதமாக இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் தனது நடிப்பை மெருகேற்றி ஒவ்வொரு படத்திலும் வெற்றி கண்டு வருகிறார் ஜெயம் ரவி.

இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை இணையத்தில் வெளியிட போவதாக அறிவித்தார்.  ரசிகர்களும் ஆவலாக அந்த வீடியோகாக காத்திருந்தனர்.

இதையும் படியுங்களேன் – தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…

ஆனால், அதில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம் இன்று மாலை அறிவிப்பு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோவை கிளிக் செய்து பார்த்தால், இதுவரை வந்த ஜெயம் ரவியின் பட போஸ்டர்கள் மட்டுமே இருக்கிறது. அதனை தொடர்ந்து இறுதியில் வரும் 29ஆம் தேதி அடுத்த படம் அறிவிப்பு வரும் என்று அறிவிப்புக்கு ஓர் அறிவிப்பாக இந்த வீடியோ அமைந்துவிட்டது.

இதையும் படியுங்களேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இவ்வளவு சோகங்களா.?! நெஞ்சை பதற வைத்த அந்த 2 சம்பவங்கள்….

இதனை பார்த்த ரசிகர்கள் சற்று அப்செட்டாகிவிட்டனர். இதனை ஒரு டிவீட் மூலமே தெரிவித்து இருக்கலாமே, இதற்கு எதற்கு ஓர் முன்னறிவிப்பு வெளியிட்டு அந்த வீடியோவில்,  புது பட அறிவிப்பு வெளியாகும் தேதி எனக் கூறியிருப்பது தங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan