jayam ravi
Jayam Ravi: சினிமாவில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டுவதை விட வில்லனாக நடித்து ரசிகர்களின் அபிமானங்களை நடிகர்கள் பெற்று விடுகின்றனர். இப்போது அதுதான் டிரெண்ட். சூர்யாவிலிருந்து விஜய் சேதுபதி என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களாக இருந்தவர்கள் எல்லாம் இப்போது வில்லனாக அவதரித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது ஜெயம் ரவியும் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகத்தான் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். முதலில் இந்த கேரக்டருக்கு விஷால்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் விஷால் சம்மதிக்காததால்தான் ஜெயம் ரவி உள்ளே வந்திருக்கிறார். இப்போதுதான் ஜெயம் ரவி நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என அனைவரும் பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கயல் முதல் மருமகள் வரை… சன் டிவி டாப்5 சீரியலின் இன்றைய புரோமோ!…
ஹீரோவாகத்தான் நடிப்பேன். மாஸ் காட்டுவேன் என்று வரும் வாய்ப்புகளை எல்லாம் விடும் நடிகர்கள் மத்தியில் ஹீரோவாக நடித்த எந்தப் படங்களும் சரியாக வரவேற்பை பெறாததால் தனது டிராக்கை மாற்றியிருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால் ஒரு காலத்தில் பெண்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகராக இருந்தவர்தான் ஜெயம் ரவி. இப்போது வில்லனாக அவதாரம் எடுத்திருப்பது ஷாக்கிங்காக இருந்தாலும் இது அவருடைய கெரியரை உயர்த்தும் இன்னொரு வழியாக கூட இருக்கலாம்.
jayam raiv1
ஆனால் வில்லனாக நடிக்கிறார் என்பதற்கு இவரை சிவகார்த்திகேயன் அடிப்பது போல எல்லாம் இருக்காதாம். தனி ஒருவன் படத்தில் எப்படி அரவிந்த்சாமியை ஒரு டீசண்டான வில்லனாக காண்பித்தார்களோ அப்படி ஒரு வில்லனாகத்தான் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறாராம். இதுவும் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஹீரோவாக ஜெயம் ரவி 16 கோடியிலிருந்து18 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
இதையும் படிங்க: Aishwarya Rai: ஆராத்யா ஐஸ்வர்யா ராய் தனியாக இருக்க காரணம்.. அபிஷேக் சொன்ன தகவல்
இந்தப் படத்திற்கும் அவருக்கு சம்பளம் 16 கோடி என்று சொல்லப்படுகிறது. அதோடு 20 நாள்கள்தான் கால்ஷீட்டாம். ஹீரோவாக 16 கோடி வாங்கிக் கொண்டு 70 நாள்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டியிருக்கும். அதே சம்பளத்தில் வெறும் 20 நாள்கள் கால்ஷீட் எனும் போது இதுவும் ஜெயம் ரவிக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்லலாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…