Categories: Cinema News latest news

ரஜினியோட மோதுறேனா!.. அடபோங்கய்யா.. ஒரே ஓட்டம் எடுத்த ஜெயம் ரவி.. சைரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துடன் மோதப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி அதெல்லாம் இல்லை பாஸ் என அந்தர் பல்டி அடித்து ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்.

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 படமே அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. ஆனால், அவர் சோலோவாக நடித்த இறைவன் மற்றும் அகிலன் படங்களுக்கு பொன்னியின் செல்வன் 2 எவ்வளவோ பரவாயில்லை என்கிற ரகம் தான்.

இதையும் படிங்க: பாய் பெஸ்ட்டிக்கு பரோட்டாவை வைத்து சூப்பர் விளக்கம்!.. ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் செம சீன்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு உடைத்த பர்னிச்சர் போதும் பாக்கியை அடுத்த ஆண்டுக்கு உடைத்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டார் போல, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்துடன் அடுத்த மாதம் ஜெயம் ரவியின் சைரன் மோதப் போவதாக கூறப்பட்டது.

ஆனால், பிப்ரவரி 2ம் தேதி சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, அதை தொடர்ந்து பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் மற்றும் அதனை தொடர்ந்து பிப்ரவரி 16ம் தேதி காதலர் தினம் முடிந்து ஜெயம் ரவியின் சைரன் படம் வெளியாகும் என தற்போது ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் – மனைவிக்கு இடையில் விரிசல் விழ இதுதான் காரணமா? அவங்க சொல்றது சரிதானே!..

தமிழ் ரசிகர்களுக்கு வெறும் ஜெயம் ரவியின் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், தெலுங்கு போஸ்டரில் மட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர்.

 

Saranya M
Published by
Saranya M