×

தயவு செய்து ஏழரைய கூட்டிடாதீங்க… ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்!

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாளைக் கூட்டம் கூடி யாரும் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாளைக் கூட்டம் கூடி யாரும் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி நடிகர் ஜெயம்ரவிக்கு பிறந்தநாள் வருகிறது. அதைக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது.

ஆனால் இந்த வருடம் உலகளாவிய கரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.

கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்" எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News