×

மகனுக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம் - மிஸ் பண்ணிட்டு புலம்பும் ஜெயம்ரவி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

முத்த மகன் ஆரவ்  ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்காக எடிசன் விருது ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு முக்கிய கட்சியில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஜெயம் ரவி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். காரணம், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். மேலும் அந்த ரோலில் தற்போது  யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என சின்ன வருத்தத்துடன் கூறினார் ஜெயம்ரவி.

From around the web

Trending Videos

Tamilnadu News