Categories: Cinema News latest news

தமன்னா செய்த சம்பவத்தால் தலையில் துண்டை போட்ட நெல்சன்!.. என்ன ஆனது?

முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதன் மூலம் இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். அவரது முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு சின்ன படமாகும். ஆனால் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நெல்சனுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற திரைப்படத்தை இயற்றினார். டாக்டர் திரைப்படம் வெகுவாக பாராட்டை பெற்றது இத்தனைக்கும் அந்த படத்தில் அதுவரை நகைச்சுவையாக நடித்து வந்த சிவகார்த்திக்கேயன், மிகவும் சீரியசான ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

ஆனால் அதற்கு அடுத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் நெல்சனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

நெல்சனுக்கு வந்த பிரச்சனை:

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த திரைப்படத்தை நெல்சன் ஒழுங்காக இயக்காவிட்டால் அது அவரது சினிமா வாழ்க்கைக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் வெகு நாட்கள் எடுத்துக்கொண்டு அந்த பாடத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

JEE KARDA web series

இதில் தமன்னாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது படத்தில் தமன்னா ஒரு ட்ரெடிஷனலான பெண்ணாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் தமன்னா ஜி கார்டா என்கிற ஒரு பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் அரை நிர்வாண காட்சிகள் தமன்னாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கலாச்சாரமான ஒரு பெண்ணாக காட்சியளிக்கும் அதே நேரத்தில் வெப் சீரிஸில் இப்படியான ஒரு கதாபாத்திரமாக தமன்னா வருவது தனது படத்தை பாதிக்கலாம் என நெல்சன் பயத்தில் உள்ளாராம். ரஜினிக்கும் கூட இது ஒரு அதிர்ச்சியான விஷயமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

Rajkumar
Published by
Rajkumar