×

கமலுக்கும் மோகன்லாலுக்கும் இதுதான் வித்தியாசம்... திரிஷ்யம் டைரக்டர் ஓப்பன் டாக்

மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் ஆகியோரிடையே இருக்கும் வித்தியாசம் பற்றி ஓப்பனாகப் பேசியிருக்கிறார். 
 

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் திரிஷ்யம். அதைத் தொடர்ந்து தமிழில் கமல், கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதுதவிர ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இதன் சீக்வெலாக சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் - 2 எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தெலுங்கில் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷே நடிக்கும் நிலையில், தமிழில் கமல் நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. 


இந்தநிலையில், கமல் மற்றும் மோகன்லால் குறித்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்,``நடிகர்கள் கமல் மற்றும் மோகன்லால் இடையே இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மோகன்லால் நடிகராகவே பிறந்தவர். ஒரு சூழலில் எப்படி எக்ஸ்பிரஷன்கள் கொடுக்க வேண்டும் என இயற்கையாகவே அவருக்கு உள்ளிருந்து வரும். அதேநேரத்தில் கமல்ஹாசனைப் பொறுத்தவரை அவர் ஒரு தேர்ந்த நடிகர். ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற நடிப்பைத் தனது தேர்ந்த அனுபவத்தில் இருந்து கொண்டுவருபவர் அவர்’’ என்று ஜீத்து ஜோசப் கூறியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News