ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் அப்டேட்
தலைவர் தம்பி தலைமையில் வெற்றிக்கு பின் ஜீவா நடித்து வெளிவரும் படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து
Jun 18, 2026, 20:40 IST
தலைவர் தம்பி தலைமையில் வெற்றிக்கு பின் ஜீவா நடித்து வெளிவரும் படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நாயகியாக லவ் டுடே புகழ் இவானா நடிக்கிறார்.
எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே போன்ற காமெடி படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இப்படத்தினை இயக்கியுள்ளார். ட்ய்வன் ச்ங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியாகியது.

இந்த நிலையில் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் டீஸர் வருகிற 21ம் தேதி வெளியாகிறது. சிவா மனசுல சக்தி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜீவா - ராஜேஷ் எம். கூட்டணி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
