ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ பட அப்டேட் வந்துடுச்சு!.. வாங்க என்னன்னு பார்க்கலாம்!..

 
jio

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதை ஜீவா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க கலகலப்பான காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

குறிப்பாக, 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜீவா - ராஜேஷ் எம். கூட்டணி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், 'JIO' என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அடுத்தடுத்த புரோமோஷன் அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் ஜூன்18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் கதைக்களம் மற்றும் ஜீவாவின் புதிய தோற்றம் குறித்து முக்கியமான குறிப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web