இன்று மாலை தகப்பன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு

தலைவர் தம்பி தலைமையில்படத்தின் வெற்றியை அடுத்து ஜீவா நடித்து வரும் படம தகப்பன்.  சூரி நடித்த மாமன், கருடன் ஆகிய 
 
thagappan movie

தலைவர் தம்பி தலைமையில்படத்தின் வெற்றியை அடுத்து ஜீவா நடித்து வரும் படம தகப்பன்.  சூரி நடித்த மாமன், கருடன் ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் ரா. வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவாவுடன் ரஜிஷா விஜயன் நாயகியாக நடித்துள்ளார்.  மார்ஷல் ராபின்சன் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.

thagappan movie

தெனாவட்டு படத்திற்கு பின் முழு நீள கிராமத்து கதையில் நடித்துள்ளார் ஜீவா. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவை  மையமாக வைத்து உருவாகும்  குடும்பக் கதையாக இந்த தகப்பன்  படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகப்பன் படம் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று மாலை வெளியிடுகின்றனர்.  

Tags

From Around the web