×

சூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மாறாதீம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெற்றிக்கு ஜிவி பிரகாஷின் கம்போசிங்தான் காரணம் என்றும் ரசிகர்கள் கொண்டாடினர் 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான ’வெய்யோன் சில்லி’ என்ற பாடலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்றும் ஹரி சிவராமகிருஷ்ணன் என்பவர் பாடி உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இந்த பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த பாடலை சூர்யாவின் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News