கார்த்தி நடிப்பில் வெளிவந்த கமெர்ஷியலான படங்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் ஒன்று. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு 5 அக்காக்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகை ஜீவிதா. இவர் இந்த படத்திற்கு முன் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால் இந்த படத்தின் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சினிமாவில் பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டு தான் நினைத்த இடத்தை அடையமுடிகிறது என்பது மாறியான சில தகவல்களை சமீபகாலமாக பேசி வருகிறார்.
மேலும் சினிமாவிற்குள் வருவதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் பண்ண சொல்றாங்க. அங்க இங்கனு போக சொல்றாங்க-னு நிறைய தகவல்களை பகிர்ந்தார். இந்த நிலையில் என் வீட்டிலிருந்து எனக்கு எந்த ஒரு துணையும் இல்லை. ஆறுதல் கூற யாரும் இல்லை. ஆனால் என் குடும்பத்திற்காக மட்டும் தான் உழைக்கிறேன்.
எனக்கு அழகு இருக்கு, வயசு இருக்கு, அதனால இன்னும் வெறி அப்படியே இருக்கு. உழைக்கிற வரைக்கும் உழைப்பேன். இதுக்கு மேல முடியாது-னு எப்பொழுது தோணுகின்றதோ அப்பொழுது வந்து கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் என் கல்யாணம் பற்றி பேச்சு எடுத்தால் வாயை கிழிச்சிருவேனு கூறியிருக்கிறார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…