×

நிறைய தவறு செய்திருக்கிறேன்... நான் சரியான அம்மா கிடையாது!! ஜெனிலியா வீடியோ....

நான் ஒரு பர்ஃபெக்ட் அம்மா கிடையாது. நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். பல நேரங்களில் நான் கூலாக இருந்ததில்லை. நிறைய விஷயங்களை நான் மறந்துவிடுகிறேன்.
 
pic

நடிகை ஜெனிலியா தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் பிரபலமானார். பின்னர் தெலுங்கு படங்களில் பிஸியாகிவிட்டார். ஜெனிலியா தமிழில் நடித்த பாய்ஸ், சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாதவை.

நடிகை ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை 2012ல் மணந்தார்.  9 வருடங்களுக்கு மேலாக இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து மராட்டிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியர்க்கு 2 மகன்கள் உள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே தொடர்பில் இருந்து வரும் ஜெனிலியா அவ்வபோதைய நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.

முன்பொருமுறை தன் மகளுக்காக தான் ஸ்கேட்டெரிங் கற்றுக்கொள்ளும்போது நடந்த விபத்து பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்ததையும் பகிர்ந்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே வைரலாகியது.

இந்நிலையில் தன்னுடைய 2வது மகன் பர்த்டே தொடர்பாக வீரியோவையும் உருக்கமான போஸ்டையும் ஜெனிலியா பதிவிட்டிருக்கிறார். அதில் ஜெனிலியா, “இன்று மகன் உன் பிறந்தநாள். எனக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்புகளில் நீ எந்த அளவுக்கு என் வாழ்க்கையின் அர்த்தம் என்று நான் கூற வேண்டும். 

உனக்கு நான் ஒரு பர்ஃபெக்ட் அம்மா கிடையாது. நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். பல நேரங்களில் நான் கூலாக இருந்ததில்லை. நிறைய விஷயங்களை நான் மறந்துவிடுகிறேன்.

சில சமயம் கிரேஸியாக பிஹேவ் செய்திருக்கிறேன். ஆனால் நான் என்ன தான் நிறைய தவறு செய்தாலும் என்னுடைய க்யூட்டன சிறிய மகன் என்னை ஒரு பெஸ்ட் அம்மா என்கிறான். வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நான் சரியாக செய்திருக்கிறேன் என்பதை என் மகன் நம்ப வைக்கிறான். 

அவன் தான் என் மகன் Rahyl Deshmukh. என் இதயத்தை திருடிக்கொள்ளும் பையன். ஹாப்பி பர்த்டே என் மிராக்கிள் Rahyl Deshmukh. அனைத்துக்கும் நன்றி. எப்போதும் நீ என்னுடன் இருப்பாய் என்று தெரியும். என்னை எப்போதும் நீ புரிந்து கொண்டிருப்பாய் என்றும் தெரியும்!” என குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News