தடபுடல் ஏற்பாடு... விவாகரத்து ஆன ஸ்டார் நடிகைக்கு இரண்டாவது திருமணம்!
பாலிவுட் சினிமாவில் சீரியல் நடிகையாக அறிமுகமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஜெனிபர் வின்ஜெட் இவர் சில திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார் .
இதனிடையே சீரியல் நடிகரான கரன் குரோவர் சிங் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்கள்.

பிரிவுக்கு பின்னர் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வந்த ஜெனிபர் வின்ஜெட் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் வில்லியம் இஸ்மாயிலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
வில்லியம் இஸ்மாயில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எம்.எச்.சி டிஜிட்டல் குழுமத்தின் வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக இயக்குநராக இருக்கிறார். தற்போது இவர்களது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற உள்ளது. இத்திருமணத்தில் நட்சத்திர பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
