jsv
விஜய் மகன் ஜேசன் சஞ்சய். வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் சேர்ந்து அறிமுகப்பாடலுக்கு ஆடிக் கலக்கி இருப்பார். சின்னதா அந்த டான்ஸ் இருந்தாலும் ரொம்ப கியூட்டா இருக்கும். அப்பாவைப் போலவே டிரஸ், டான்ஸ் ஸ்டெப்னு கலக்கி இருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்புக்குள்ளானது. கனடாவிலும் போய் பிலிம் மேக்கிங் படித்தாராம். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லைகா தயாரிப்பில் ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இதற்கான பூஜையும் நடந்து;ளது. இது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் பெரிதும் ஈர்த்துள்ளது. பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் அதுவும் விஜய் மகன் படம் இயக்க உள்ளாரா என பலரும் ஆர்முடன் கேட்டு வருகின்றனர்.
soori
சமீபத்தில் இவர் நடிகர் சூரியிடம் ஒரு படம் குறித்து கதை சொன்னாராம். அதற்கு சூரி கொடுத்த பதில் தான் ஹைலைட் என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையை பொறுமையாகக் கேட்டாராம் சூரி. அதன்பிறகு இந்தக் கதை ரொம்ப நல்லாருக்கு. ஆனா இது மாஸ் நடிகர்களுக்கான கதை. என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது செட்டாகாதுன்னு சொல்லி விட்டாராம்.
அப்படிப் பார்த்தா அந்தக் கதை விஜய் போன்ற மாஸான நடிகர்களுக்குத் தான் செட்டாகும். அப்பாவுக்கு சொல்ல வேண்டிய கதையை எங்கிட்ட சொல்லிட்டீயேப்பா என மறைமுகமாகக் கலாய்த்துள்ளாரோ சூரி என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜேசன் சஞ்சய் ஜங்ஷன், சிரி ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். இவை அதிகப்படியான கவனத்தைப் பெறவில்லை. என்றாலும் இவர் அடுத்ததாக இயக்கிய புல் தி டிரிக்கர் என்ற குறும்படம் பெரிதும் கவனம் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
இளம் வயதிலேயே துடிப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய வேண்டும் அல்லவா? விஜய் தனது 69வது படத்துடன் திரையுலகில் இருந்து விடைபெறுவதும், இவர் தனது இன்னிங்சைத் தொடங்குவதும் சிறப்பான தருணமாகவே இருக்கும்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…