ஹாலிவுட் வாய்ப்பு வந்தால் அப்பாதான்! ... விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் சொன்ன பதில்

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்.  இவர் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா

 
 
sanjay

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்.  இவர் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா. லைக்கா புரொடெக்சன் தயாரிக்கும் இந்த படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். தமன் எஸ் இசையில்  சமீபத்தில் வந்த இப்படத்தின் டிரைலர் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்மா இம்மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் அவரது தந்தை விஜய் நடித்த ஜன நாயகன் பப்டம் வெளியானதால் இப்படம் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழில் பிரபல யூடியூப் சேனலான பிகைண்ட்வுட்ஸ்க்கு சஞசய் பேட்டி அளித்திருந்தார்.தொகுப்பாளினி டிடி அவரிடம்,  ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து  ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கலாம்... இந்தியாவில் இருந்து ஒரு நடிகரை அழைத்து வாருங்கள் என்றால் யாரை அழைத்துச் செல்வீர்கள்?  என்ற கேள்வி கேட்டார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த ஜேசன் சஞ்சய்,  என் மைண்டுக்கு முதலில் வருவது அப்பாதான்  என்றார். இதையடுத்து தொகுப்பாளர்,  அப்பாவா?  என்று மீண்டும் கேட்டபோது, ஆமாம்... நல்ல காம்பினேஷனா இருக்கும்ல  என்று சிரித்தபடியே பதிலளித்தார். ஜேசன் சஞ்சயின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விஜய் ரசிகர்களும் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

From Around the web