மனுஷன் ரொம்ப நொந்துபோய்ட்டார்.... ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி:
மனைவியுடன் ஆன விவாகரத்து பிரச்சனையில் மிகவும் மனம் நொந்து போயிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தான் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்னோட சொந்த பிரச்சனையை தீர்த்து முடித்துவிட்டு தான் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்துவேன் என தெரிவித்திருந்தார் .

இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜெயம் ரவி பிரஸ் மீட்டில் தன் மனைவியுடன் ஆன பிரச்சனையையும் மகன்கள் மீது வைத்திருக்கும் பாசம், காதலியை விட்டு பிரிந்து சென்றது உள்ளிட்ட மனதில் புதைத்து வைத்திருந்த அனைத்து வலிகளையும் வெளியில் கொட்டி தீர்த்து அழுதார்.
சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படத்தில் மிகவும் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி அழுது கத்தி கோபமாக பார்த்தது இதுதான் முதல் தடவை. இந்த மனுஷன் இப்படியாகி விட்டாரே என பலரும் அவரை நினைத்து வேதனை அடைந்தார்கள்.
ஐயப்ப சுவாமி தரிசனம்:

இந்த நிலையில் மிகவும் மனம் நொந்து போயிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தற்போது சபரி மலையில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மனதில் இருக்கும் வலிகளை நீக்க ஆன்மீகப் பயணத்தை தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவிக்கு மன தைரியத்தையும் உடல் வலிமையும் இந்த ஐயப்ப சுவாமி கொடுக்கட்டும் என அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
