எனக்கு அரசியல்ல விருப்பம் இல்ல... வெளியானது ஜீவாவின் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' டீசர்!

 
jolliya iruntha oruthan teaser

பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' (JIO). இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே, ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் வெளிவந்த 'சிவா மனசுல சக்தி' (SMS) மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 'JIO'-வில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், காமெடியில் கலக்க 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் புகழ் சுதாகர் நடித்துள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web