மதுரையில் பூஜையுடன் துவங்கியது ஜீவாவின் 'தகப்பன்'!
Jul 20, 2026, 13:54 IST
'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜீவா கைவசம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' மற்றும் இயக்குநர் ரா.வெங்கட் படம் என இரண்டு படங்கள் உள்ளது.
இதில் ராஜேஷ்.எம் இயக்கியுள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' (JIO) படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. 'கிடா' புகழ் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கும் படத்தை 'Lark ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த படத்திற்கு 'தகப்பன்' என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்தின் ஷூட்டிங்கை இன்று (ஜூலை 20-ஆம் தேதி) முதல் பூஜையுடன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் துவங்கியுள்ளனர். இதற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
