எஸ்எம்எஸ் கூட்டணியில் ஜியோ!.. ஜீவாவின் புதுப்பட டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..
எம். ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் ஜீவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக இவானா நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜாலியா இருந்த ஒருத்தன் (JIO) என பெயரிட்டுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுருக்கமாக ‘ஜியோ’ (JIO) என அழைக்கப்படும் இந்த திரைப்படம், முழுநீள நகைச்சுவை கலந்த பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டன.
மேலும், சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் எம். ராஜேஷ், ஜீவா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் வெற்றி கூட்டணி சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜேஷின் வழக்கமான நகைச்சுவை பாணியுடன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்திருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் டீசர் திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
