×

என்ன ஆட்டம்.. பிபி வீட்டுக்குள்ளே இதெல்லாம் காட்டலையே... அப்போ அதெல்லாம் பொய்யா ஜித்தன்... 

நடிகர் ஜித்தன் ரமேஷின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். நிகழ்ச்சியின் முதலில் இருந்தே ஒற்றை வார்த்தை பேசினாலும் மாஸாக பேசி அப்ளாஸ் வாங்கினார். ஒரு கட்டத்தில் முதல் மூன்று சீசன்களை போலவே தூக்கம், அமைதி என இருந்து வந்தவர். ஒரு வேளை இந்த வருட சீசன் வின்னர் இவர்தானோ என நினைக்க கூட வைத்தார். இந்த சமயத்தில் தான் அன்னை அர்ச்சனா எண்ட்ரி ஆனார். நிஷாவை போல அத்தணை புகழும் க்ளோஸ் ஆனது  ரமேஷிற்கும் தான்.

இதை தொடர்ந்து, சரியான வழியனுப்பும் நிகழ்வுகள் கூட நடக்காமலே ரமேஷ் வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் கூட களத்தில் சந்திப்போம் படத்தின் ஸ்பெஷல் காட்சியை தனது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு திரையிட்டு மகிழ்ந்தார்.

இந்நிலையில், ரமேஷ் ஒரு ரீல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். மாஸாக நடனம் ஆடி இருந்த அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு செம ஷாக் என்றே கூறவேண்டும். பிபி வீட்டில் அவர் ஆடிய ஆட்டத்துக்கு மேலாக இருந்ததால் பலரும் அவரை புகழ்ந்தனர். தொடர்ந்து, தனது சக போட்டியாளர்களான ஆஜித், அர்ச்சனா, சோம், கேபி ஆகியோர் செம ப்ரோ என அவருக்கு அப்ளாஸ் தட்டினர். அனிதா சம்பத்தோ, இவ்ளோ தெரிது, பிபி வீட்டுக்குள்ள மட்டும் ஆடவே மாட்டீங்க என கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போதைய சமூக வலைத்தள வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News