இறுதிகட்ட நகர்வில் ஜனநாயகன்.. தயாரிப்பாளர் கொடுத்த செம அப்டேட்

 
இறுதிகட்ட நகர்வில் ஜனநாயகன்.. தயாரிப்பாளர் கொடுத்த செம அப்டேட்

தம்ழி சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் விஜய். ரஜினிக்கு இணையான ரசிகர்களையும் , வியாபாரத்தையும் கொண்டவர் இவர். விஜய் கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்தார். நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவும் ஆகிவிட்டார்.

விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கிய இந்த படத்தில்,பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர். படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஏனோ இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாவது எப்போது என யாருக்குமே தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் ஜனநாயகன் படம் குறித்து அப்பட தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட் நாராயணா கூறுகையில், இன்னும் இரு வாரங்களில் ஜனநாயகன் வெளியாகும். தணிக்கை சான்றிதழ் குறித்து இறுதி கட்ட நகர்வுகள் நடந்து வருகிறது. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாகும் என்று கூறினார்.

From Around the web