×

அரசு அதிகாரிகளுக்கு ஜோதிகா சாட்டை அடி... இயக்குநர் புகழாரம்!

சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் "கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். தஞ்சசையில் ஷூட்டிங் நடந்த போது தான் பார்த்த ஒரு மருத்துவமனையை குறித்து அவர் அவ்வாறு பேசினார்.

 

இதனையடுத்து சிலர் அவருக்கு விரோதமாக சர்ச்சை கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் இதுபற்றி அவரது கணவரும் நடிகருமான சூர்யா ஆதரவாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் படத்தின் ஷூட்டிங்கின் போது தான், அந்த மருத்துவமனை சம்பவம் நடந்ததாகவும். அப்போதே நடிகை ஜோதிகா அதுபற்றி கூறி வருத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் கூறிய அவர் "நடிகை ஜோதிகா சொன்ன பிறகு தான், அரசு அதிகாரிகள் அந்த மருத்துவமனையை சரிபார்த்து ஒழுங்குபடுத்தினர். நமக்கு தெரிந்தது அகரம் மட்டும் தான். ஆனால் நமக்கு தெரியாமல் அவர் பல பெரிய, பெரிய உதவிகளை செய்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News