Connect with us
chippu

Cinema News

நடிச்சா விஜய் படம்! இல்லைனா நோ தான்.. பல வாய்ப்புகள் வந்தும் தட்டிகழிக்கும் செலிபிரிட்டி

H.Vinoth:  என்னதான் விஜய் அரசியலுக்கு போனாலும் ரசிகர்கள் இதை மனதளவில் ஏற்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத் தக்கது. ஆனால் இந்தளவுக்கு பீக்கில் இருக்கும் போது அவரால் பல கோடிகள் லாபத்தை அடையும் தமிழ் சினிமா இருக்கும் போது எல்லாவற்றிற்கும் மேலாக 200 கோடி சம்பளத்தை எப்படி ஒருவரால் உதறி தள்ள முடிகிறது என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

பல பேர் அரசியலுக்கு வருவதே சம்பாதிக்கத்தான். ஆனால் சம்பாத்தியத்தை எல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு விஜய் வருகிறார் என்றால் அவருக்குள் எப்படிப்பட்ட ஒருதாக்கம் இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும். ஒரு அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: யார் அந்த பிரதீப்? பிரியங்காவுக்கு ஏன் இவ்ளோ சப்போர்ட்? வெளியான அதிர்ச்சி தகவல்

2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும் என்றே எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடைசியாக நடிக்கும் தளபதி 69 படத்தை வினோத்தான் இயக்குகிறார். துணிவு பட ரிலீஸ் நேரத்திலேயே இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.

அப்பொழுதே விஜய்க்கா ஒரு நல்ல அரசியல் கதை வைத்திருக்கிறேன். அவரை வைத்து பொலிட்டிக்கல் சப்ஜெக்டைத்தான் எடுப்பேன் என்று வினோத் கூறியிருந்தார். அது சரியான நேரத்தில்தான் நடந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: 5 கெட்டப்புல கலக்கப் போகும் வடிவேலு… டைரக்டர் அவரா…? அப்போ சூப்பர்ஹிட் தான்!

விஜய் படம்னாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் அவருடன் நடிப்பது என்பது அனைவருக்குமான கனவாகவே இருக்கிறது. அப்படி ஒரு செலிபிரிட்டி நடித்தால் விஜய் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால் நோ தான் என சொல்லியிருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிப்பு சிப்பித்தான். எத்தனை விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் நடித்தால் விஜய் படம்தான். இல்லையென்றால் கிடையவே கிடையாது என்று மறுத்துவிட்டாராம் சிப்பு சிப்பி.

இதையும் படிங்க: தொட்டதுக்கே இந்த தண்டனையா? குஷ்பூ மாதிரி இருங்க.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

பேரு புகழ் சம்பாத்தியம் இவையெல்லாம் தாண்டி விஜயுடன் நடிப்பதே என்னுடைய இலக்கு என்று ஒரு குறிக்கோளில் இருக்கிறார் சிப்பு சிப்பி. அந்தளவுக்கு விஜயின் தீவிர ரசிகையாம் இவர். அதனால் இன்னும் ஒரே ஒரு படம் எனும் போது இந்த பொண்ணை தளபதி 69 படத்தில் போடுங்க என ரசிகர்கள் வினோத்தை டேக் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top