Connect with us

Bigg Boss

கமலுக்கு ஈகோ மைண்ட்செட்!.. பிக் பாஸ் ஷோவில் இப்படி ரம்பம் போடுறாரே.. விளாசிய பிக் பாஸ் விமர்சகர்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியிலும், பிக் பாஸ் விமர்சகர்கள் மத்தியிலும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

முன்பெல்லாம் வார நிகழ்ச்சி போரடிக்கும், கமல்ஹாசன் எப்போ வருவார் சாட்டையை சுழற்றி போட்டியாளர்களை வறுத்து எடுப்பார் என்பதை காண ரசிகர்கள் காத்திருந்த நிலை மாறி தற்போது வீக்கெண்ட் ஷோ ரொம்பவே வீக்கான ஷோவாக மாறிவிட்டது என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: கடைசி வரை கண்டுக்காத வடிவேலு!.. வீட்டிலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்த போண்டா மணி

ஜோ மைக்கேல் என்பவர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை யூடியூப் சேனல் ஒன்றில் விமர்சனம் செய்து வருகிறார். சனிக்கிழமை எபிசோடை விமர்சித்த அவர், முக்கியமான கேள்விகளை கமல் கேட்காமல், மொக்கை போட்டு வருகிறார் என்றும் சுயசரிதை பாடுகிறேன் என பாலச்சந்தரின் நினைவு நாள் கதையை வைத்து பாதி ஷோவை போரடிக்க வைத்துவிட்டார் பலருக்கு இரவு தூக்கமே வந்துவிட்டது என கலாய்த்துள்ளார்.

மேலும், வாரம் முழுக்க பலரும் கமலை கலாய்த்து வந்தாலும் வார இறுதியில் புதிய புதிய உடைகளை அணிந்து கொண்டு ஈகோ மைக் செட் உடன் மீண்டும் வந்து நிகழ்ச்சியை நடத்துவது வேற மாறி சார் என வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: இப்பவே அடுத்த பலியாடு விஜய் தான்னு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க!.. எல்லாத்துக்கும் காரணம் அதுதான்!..

ஃபைனல் டச் உங்க படத்தை பார்க்கிற எங்களை கலாய்ச்சது தான். தேங்க்ஸ் ஃபார் தரமான செருப்படி. உங்க படம் ரிலீஸ் ஆகும் போது அதற்காக சப்போர்ட் செய்தவர்களுக்கு நல்லா வச்சு செஞ்சீங்க.. இதுதான் உங்களுடைய ட்ரூ கலர் என போட்டுத் தாக்கி உள்ளார்.

ஜோ மைக்கேலின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் திட்டி வருகின்றனர். இது ஒரு விளையாட்டு ஷோ என்றும் விமர்சனம் என்கிற பெயரில் இஷ்டத்துக்கு பேசக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top