×

ஜோசப் விஜய்னு சொன்னதுக்கு குதிச்சீங்களே.. இப்ப என்னாச்சு...? கலாய்க்கும் ஹெச்.ராஜா...

நேற்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், நடிகர் விஜய் மற்றும் அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும், வினியோகஸ்தர், கடன் அளித்தவர் என மொத்தம் 38 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காசோலை மூலம் ரூ.300 கோடி மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.  

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை?’ என ஒரு டிவிட்டும், ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே’ என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News