Connect with us

latest news

சூர்யாவுக்கு சப்போர்ட் செய்றேனு இப்டி மாட்டிக்கிட்டீங்களே ஜோதிகா… தேவையா இந்த வாய் பேச்சு?

Surya Jothika: நடிகர் சூர்யா மற்றும் அவர் மனைவி ஜோதிகா இருவரும் சமீப காலங்களாகவே ஒருவரை இன்னொருவர் புகழ்ந்து பேசி வருவது வைரலாகி வருகிறது. ஆனால் இதில் நடிகை ஜோதிகா பேசிய ஒரு விஷயம் தற்போது ரசிகர்களை சீண்டி பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திய ஜோதிகா பல ஆண்டுகள் இடைவேளைக்கு பின்னர் 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்பிற்குள் உள்ளே வந்தார்.

இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…

இதை தொடர்ந்து அவரும் தன்னுடைய நடிப்பின் மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் இத்தம்பதி தமிழ்நாட்டில் இருந்து மும்பை பக்கம் செட்டில் ஆகினர். இது குறித்து விசாரித்த போது நடிகர் சூர்யா பாலிவுட் படத்தில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியானது.

அதைத் தொடர்ந்து பேட்டிகளில் இருவருமே ஜோதிகாவின் பெற்றோர் உடன் சில ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் என தெரிவித்திருக்கின்றனர். கூட நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா குறித்து பல விஷயங்களை பேசி இருப்பார். ஆனால் தற்போது நடிகை ஜோதிகா தன்னுடைய கணவர் குறித்து பேசிய விஷயம் மீண்டும் வைரலாகி ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: உங்க புருஷர் பண்ணதை மறந்துட்டீங்களா நயன்!.. NOC மறுக்கப்பட்டதன் உண்மை பின்னணி…

இருவருக்குமே தேசிய விருது கொடுக்கப்பட்டதாக பேசியிருக்கிறார். ஆனால் இது குறித்து ரசிகர்கள் தற்போது பேச வேண்டும் என்பதற்காக பேசாதீர்கள். கங்குவா திரைப்படத்தில் திஷாவின் கேரக்டர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் மற்றும் லிஜு தான் ஹீரோ மற்றும் ஹீரோயின்.

அதுபோல சூரரைப் போற்று திரைப்படத்தில் உண்மை கதையை படமாக இயக்கியது பெண் இயக்குனர் தான். அதில் எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லை. சப்போர்ட் செய்கிறேன் என பேசி ரசிகர்களிடம் அடி பலமாக விழப்போகிறது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top