நட்சத்திர குடும்பமாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் நடிகர் சிவகுமார் குடும்பம். தனது இரண்டு மகன்கள், மருமகள் என எல்லாருமே சினிமாவில் சாதித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நடிகர் கார்த்தியும் திருமணமாகி சினிமாவில் நடித்து வருகிறார்.
மேலும் சிவகுமார் சினிமாவில் இருந்து விலகி இலக்கியம் , நாவல் என இவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். இவருக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். எல்லாரும் சினிமாவில் தொடர்பில் இருக்கும் போது மகள் மட்டும் சினிமாவில் தலை காட்ட வில்லை. மேலும் சிவகுமார் மகள் பிருந்தா ஒரு நல்ல பாடகியும் கூட.
ஆனால் எந்த சினிமா பாடல்களையும் பாடியது இல்லை. ஒரு விழாவில் குடும்பத்தோடு சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது சிவகுமாரின் மகள் தன் அண்ணன்களை பற்றி பெருமையாக பேசினார். அப்போது குறுக்கீட்டு ஜோதிகாவிடம் பிருந்தாவை பற்றி கேட்டனர்.
ஜோதிகாவும் பிருந்தா நன்றாக பாடுவார். ஒரு சமயம் இதை பற்றி சூர்யாவிடம் கேட்டேன்.எல்லாரும் சினிமாவில் இருக்கும் போது பிருந்தாவையும் சினிமாவில் பாட அனுமதிக்கலாமே என்று கேட்டதாகவும் அதற்கு சூர்யா அந்த வாய்ப்பு தானாக அவளை தேடி வரவேண்டும். நாம் உருவாக்க கூடாது. அவள் உழைப்பை தேடி வரும் போது அவள் பாடட்டும் என்கிற மாதிரியான பதிலை கூறினார் என்று ஜோதிகா தெரிவித்தார்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…