×

நவீன பாசமலர் தான் இந்த உடன்பிறப்பா? ஜோதிகாவின் 50 வது படம் என்ன சொல்கிறது

கடசியில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்டில் கதை கேட்டிருக்கிறார்கள். 
 
 
28505500-e949-456c-9f1b-120371f5431e

கதையை கேட்ட அவர்கள். "இது நவீன பாசமலர்" என்று பாராட்டினார்கள் என்கிறார் சரவணன். 

திருமணத்துக்குப் பின் நடிக்காமலிருந்த ஜோதிகா, நல்ல கதைகளாக அலசி ஆராய்ந்தே நடிக்கிறார். அப்படிப்பட்டவர் தனது 50 வது படமாக உடன்பிறப்பேயை தேர்வு செய்துள்ளார்

jo

தஞ்சை விவசாயிகள் பிரச்சனையை மையப்படுத்தி வெளியான கத்துக்குட்டி சரவணனின் முதல்படம். நல்ல விமர்சனங்கள் கிடைத்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை. அடுத்ததாக உடன்பிறப்பே கதையை தயார் செய்து அதனை படமாக்க தயாரிப்பாளர் தேடி பல வருடங்கள் அலைந்துள்ளார். 

கடைசியில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்டில் கதை கேட்டிருக்கிறார்கள். கதையை கேட்ட அவர்கள். "இது நவீன பாசமலர்" என்று பாராட்டினார்கள் என்கிறார் சரவணன். 

jo

ஜோதிகா பற்றி கூறுகையில், "அவர் முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக மாறி நடித்துள்ளார். பாசமும், கமீபரமும்மிக்க பெண்மணியாக படம் முழுக்க வருவார்" என்றார் சரவணன். ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவராக இதில் வருகிறார். ஜோதிகாவின் கணவராக சத்திரகனி. 

அண்ணன் - தங்கை பாசத்துக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருப்பது பாசமலர். அதையடுத்து கிழக்குச் சீமையிலே வந்தது. இப்போது நவீன பாசமலராக உடன்பிறப்பே தயாராகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News