Categories: Cinema News latest news

விஜயகாந்தை பேசியது சரியா?.. ஊருக்கு ஒரு நியாயம் வடிவேலுக்கு ஒரு நியாயமா.? பிரபலம் பாய்ச்சல்..

வெறுப்பை சம்பாதித்த வடிவேலு :

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. எந்த அளவுக்கு காமெடி செய்து மக்களிடம் வரவேற்பை பெற்றாரோ.. அதேபோல தன்னுடைய நடத்தையால் மக்களால் ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் வடிவேலு சினிமா ஓடாததற்கு காரணம் விமர்சகர்கள்தான் என்று கூறியிருந்தார் இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், “வடிவேலு இன்று எங்களைப் பற்றி புகார் கொடுக்கிறார். ஆனால் வடிவேலுவை பற்றி எத்தனை நடிகைகள் புகார் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?..பல நடிகைகள் வடிவேலுவால்தான் சினிமா விட்டு ஒதுங்கினார்கள். அவர் என்னமோ பரம யோக்கியன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க கூடாது”.

தயாரிப்பாளர்களை ஓடவிட்ட வடிவேலு :

”இவரால் எத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கண்ணீர் வடித்தார்கள். வடிவேலு செய்த காரியத்தைதான் பேசினோமே தவிர மற்றபடி அவர் மீது அவதூறு எல்லாம் பரப்பவில்லை. நடிகர் சங்க தலைவர் விஜயகாந்தை அவதூறாக பேசினார் வடிவேலு. ஆனால் அப்படி பொதுவெளியில் பேசியது தப்பில்லை. youtube-ல் அவர் செய்த சேட்டைகளை சொன்னால் அது தப்பா? ”

Bailwan ranganathan

விஜயகாந்தை பேசியது சரியா? :

  • ”அவர் விஜயகாந்தை விமர்சனம் செய்தால் சரி.. நாங்க வடிவேலுவை விமர்சனம் செய்தால் தப்பா? தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்தை தப்பா பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? அவருக்கு கூட்டம் சேர்ந்ததே தவிர அது ஓட்டாக மாறவில்லை. மக்கள் வடிவேலை ஒதுக்கிவிட்டு ஜெயலலிதா முதலமைச்சராகவும் விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக்கினார்கள்”.
  • ”வடிவேலு தேவையற்றதை பேசினால்தான் விஜயகாந்த் ஜெயித்தார். நான் பழசை கிளறவில்லை. வடிவேலு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒழுக்கமான முறையில் ஒழுங்காக நடித்துக் கொண்டிருந்தால் அவருக்கு என்றும் மார்க்கெட் இருக்கும்”.
  • ”ஆனால் அவர் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனால் பிரச்சனை, இயக்குனருடன் பிரச்சினை, தயாரிப்பாளருடன் பிரச்சனை என எங்கு சென்றாலும் பிரச்சனை இருந்ததால் எல்லோரும் அவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். இவருக்கு மார்க்கெட் போனால் தான் யோகி பாபு, சூரி போன்றவர்கள் எல்லாம் அவரிடத்தை பிடித்துக் கொண்டார்கள். ஒழுங்காக இருந்தால் இவர்கள் எல்லாம் இந்த பக்கம் வந்திருக்கவே முடியாது. அதுதான் உண்மை”. என்று கூறி இருக்கிறார்.
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G