
Cinema News
இப்போ எம்ஜிஆர் இருந்திருந்தால் கதையே வேற.. இன்னும் மெத்தனமாகவே இருக்கும் விஜய்.. பொளந்த பிரபலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தான் சினிமா உச்சத்தில் இருக்கும்போதே தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்ய விரும்பாததை விஜய் துணிந்து அரசியலில் களமிறங்கினார். தமிழ வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தொடர்ந்து தனக்கான அரசியலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி நியமனம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விஜய் கட்சி ஆரம்பித்து இவ்வளவு நாட்கள் ஆகியும் பெரிதாக எதிர்ப்பு போராட்டங்களோ அல்லது இந்த மாதிரி போராட்டங்களுக்கு சப்போட்டும் செய்யவில்லை. அவர் இன்னும் work from home அரசியல் தான் செய்து வருகிறார் என்றும் எப்பொழுதுதான் அவர் பீல்டுக்கு வர போகிறார் என மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு டிவிகே விஜயை பயங்கரமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

“வாழ்க்கையில் பொன்னான வாய்ப்பு யாருக்காவது எப்போதாவது கிடைக்கும். அது எல்லாருக்கும் அமையாது. அதேபோல அரசியலிலும், சினிமா வாழ்க்கையிலும் இந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கும் போது அதை கரெக்டாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் விஜய்க்கு பொருந்தும். இன்றைக்கு இளைஞர்களுடைய வாக்கு தாய்மார்களுடைய வாக்கு எல்லாம் விஜயின் பக்கம் தான் இருக்கிறது. அதனால் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது”.
”அப்படி இருக்கும் பட்சத்தில் அரசியலை இன்னும் ரொம்ப தயங்கி செய்கிறார். பொறுமையா பாத்துக்கலாம் அப்படின்னு ரொம்ப மெத்தனமாக ஏன்? இருக்கிறார் என்று தெரியவில்லை. இன்னும் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் தான் இருக்கும் நிலையில் விஜய் இடத்தில் வேறு யாராவது தலைவர் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். கடந்த 10 நாட்களாக இந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்”.

”இந்த மாதிரி நேரத்தில் விஜய் அவர்களுடன் இருந்து ’நான் உடன் நிற்கிறேன் என்று நின்றாலே போதும்’, இதுதான் அரசியல். ஆனால் அவர் செய்யத் தாங்குகிறார். விஜய் இடத்தில் எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த போராட்டக்களம் வேறு மாதிரி இருந்திருக்கும். அந்தப் போராட்ட களத்தில் தூய்மை பணியாளர்களுடன் ஒருவராக அங்கேயே உட்கார்ந்து இருப்பார் எம்ஜிஆர். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை”.
”எம்ஜிஆர் ஒரு கூத்தாடி அவர் நல்லா மேக்கப் போட்டுக் கொண்டு படத்துல ஹீரோயின்களை கட்டி பிடிச்சு ஆடுவாரு, பஞ்ச் டயலாக் பேசுவாரு, இதனால் மட்டும் மக்கள் அவருக்கு ஓட்டு போடவில்லை. அவர்மக்களோடு மக்களாய் நின்று அவர்களுக்கு தேவையானதை செய்த நபர். திரையில் கடை கோடியில் உள்ள மக்களை எப்படி ரசித்து அவர்களுக்காக போராடினாரோ நேசித்தாரோ அதேபோல நிஜத்திலும் அவர்களை நேசித்தார் அதுதான் எம்ஜிஆர்”.
”அது முதல்வர் ஆன பின்னும் தொடர்ந்தது. விஜய் கவின் பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை. அஜித் குமார் கொலை வழக்கில் 5 நாட்கள் கழித்துதான் போராட்டக் களத்திற்கு செல்கிறார். இது எல்லாம் பெரிய வருத்தம் தான். விஜய் தயவு செய்து குரல் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் அரசியல் செய்ய முடியும். வெறும் எக்ஸ் வலைதளத்திலும் இன்ஸ்டாகிராமிலும் உங்கள் பதிவு எடுபடாது. களப்பணி அவசியம். அப்படி ஒரு நம்பிக்கை அவர் கொடுக்கும் பொழுது தான் மக்களுக்கு அவர் மீது ஒரு பாசம் வரும்”. என்று கூறியுள்ளார்.