
latest news
ரஜினி கமல் படம் லோகேஷ் அவுட்.. உச்சகட்ட கோபத்தில் ரஜினி எடுத்த முடிவு..
ரஜினி கமல் காம்போ :
சுமார் 45 வருடங்களாக இணையாமல் இருந்த ரஜினி கமல் காம்போ. மீண்டும் இணைய உள்ளது. இதனை கமல்ஹாசன் சைமா விருது வழங்கும் விழாவில் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஜெயிலர்-2 படப்பிடிப்புக்காக செல்லும் போது airport-ல் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி அந்த விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.
ரஜினி போட்ட குண்டு :
மேலும் கூடுதல் தகவலாக அந்த படத்திற்கான கதை கதாபாத்திரம் மற்றும் இயக்குனர் முடிவாகவில்லை இன்னும் talks-ல் தான் இருக்கிறது என்று கூறினார். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் ரஜினி இப்படி ஒரு குண்டை போட்டு விட்டு போய்விட்டார்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு ரஜினி எடுத்த முடிவிற்கு என்ன காரணம் என்று விளக்கி உள்ளார் அதில்,” சமீபத்தில் ரஜினி ஏர்போர்ட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவருடைய அடுத்த படத்தில் லோகேஷ் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டார். இவர் இல்லை என்றால் யார் இயக்குனர்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது”.

கூலியில் கோட்டை விட்ட லோகேஷ் :
”இதையெல்லாம் மீறி கூலி படத்தை சரியாக எடுத்திருந்தால் superstar மனதில் ஒரு இடம் பிடித்திருக்கலாம் லோகேஷ். இந்நிலையில் ரஜினி-கமல் காம்போ திரைப்படத்திற்கு direction supervisor-ஆக கே.எஸ்.ரவிக்குமார் இருப்பார் என்று தற்பொழுது முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரை மாதிரி ஒரு அற்புதமான வேலை வாங்கும் இயக்குனர் இங்கு பார்ப்பது அரிது”.
”கூலி படம் ரஜினிக்கு திருப்தியே கிடையாது. A certificate-டை வேண்டுமென்றே ஒரு டைரக்டர் சேர்க்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம். Sun pictures நிறுவனமும் ரஜினிகாந்தும் ஏதும் கேட்கவில்லையே? என்றால் அவர்கள் இயக்குனர் கையில் முழு பொறுப்பையும் விட்டுவிட்டார்கள். இதனால் theatre-க்கு வந்த சின்ன குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இது எவ்வளவு பெரிய drawback” .
” நிறைய இடங்களில் இயக்குனர் லோகேஷ் compromise ஆகி இருக்கலாம். ஆனால் அவர் எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை. மேலும் கூலி படம் ரஜினி ரசிகர்களுக்கான படமாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார். கூலி படத்திற்கான promotion interview-களில் கூலி படத்தை பற்றி பேச சொன்னால் லியோ படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்”.
லோகேஷின் திமிர் பேச்சு :
”படம் வெளியான பிறகு 150 ரூபாய் கொடுக்கும் ரசிகர்களுக்கு என்னால் படம் செய்ய முடியாது. நான் என்ன கதை செய்கிறேனோ அதைத்தான் பார்க்க வேண்டும். என்று பேசிவிட்டார் இந்த மாதிரி திமிர் பேச்சால் ரஜினி மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். உதாரணத்திற்கு இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படம் முடிந்த பிறகு எந்த press meet, interview, medi atention என எதுவுமே அவரிடம் இருக்காது”.
”ஆனால் லோகேஷ் கூலி வெளியான பிறகு நிறைய கல்லூரி விழாக்களுக்கு செல்வது, இன்டர்வியூ கொடுப்பது, audio launch என எங்க மைக் போட்டாலும் அந்த படத்துக்கு எதிராக பேசும்பொழுது ரஜினி பயங்கரமாக ட்ரிக்கர் ஆகிவிட்டார். இந்தக் கோபத்தின் வெளிபாடுதான் ரஜினி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லை அமீர்கான் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளார்”.
ரஜினி-கமல் படம் இயக்குனர் :
”ரஜினி படம் என்று ஒத்துக் கொண்டதற்கு என்னை நன்றாக செய்து விட்டார்கள் என அவரையே வெறுக்க வைத்து விட்டார்கள். இதே கோபம் தான் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சன் பிக்சர்ஸ்க்கும் இருக்கிறது. ஏனென்றால் ஒருபுறம் சன் பிக்சர்ஸ் மறுபுறம் ரஜினி என்று இவ்வளவு பெரிய ஜாம்பவான்களை முடித்துவிட்டார் லோகேஷ்”.
”ரஜினி-கமல் என இந்த இரண்டு ஜாம்பவான்களையும் இயக்கக்கூடிய இயக்குனர்கள் என்னுடைய அபிப்பிராயத்தில் சொல்ல வேண்டும் என்றால் அட்லி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள். அடுத்த வருடம் ஜூன்க்கு பிறகு தெரியும் இந்தப் படத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்று அப்படி இந்த படம் வெளிவரும் போது இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை”. என்று கூறியுள்ளார்.
