Connect with us
actress

Cinema News

இளம் நடிகைகளை வேட்டையாடும் நடிகர்கள்… இயக்குனர்கள் செய்தது என்ன?..

கேரளாவில் நடிகர் சங்க தலைவராக உள்ள மோகன்லால் மேல் கேள்வி எழுப்பி இருக்காங்க. நடிகைகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு? என்ன நடந்ததுன்னு நிருபர் கேள்வி கேட்க, மூத்த பத்திரிகையாளர் சேகுவாரா அதற்கு இப்படி பதில் அளித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களிலும் விசாரணை கமிட்டி இருக்கும். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. மலையாளத்தில் திலீப்புக்கு 2 மனைவிகள். 3வதாக பாவனா மீது பாலியல் டார்ச்சர் கொடுத்து அது புகாராகி நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்கிறது. தொடர்ந்து நடிகைகளின் புகார் காரணமாக அரசு ஒரு விசாரணை கமிட்டியை அமைக்கிற கட்டாயத்துக்கு ஆளாகிறது. கேரள நடிகைன்னாலே ஆசைக்கு இணங்குவாங்கன்னு சொல்றாங்க.

தங்கர்பச்சான்னா ‘தமிழ் தமிழ்’னு கொதிப்பாரு. ஏன் நவ்யா நாயருக்கு வாய்ப்பு கொடுக்கிறே… தமிழ் பெண்கள் இல்லையா… பாரதிராஜா ‘என் இனிய தமிழ் மக்களே’ன்னு பேசுறாரு. ஆனா அவர் வாய்ப்பு கொடுத்ததுல அநேகம் பேரு மலையாள நடிகைகள்.

தங்கர்பச்சான் எடுத்ததே நாலு படம். அதுல 3 படத்துல நவ்யா நாயர். அப்போ இங்க என்ன நடக்குது? அட்ஜஸ்மென்ட், கெமிஸ்ட்ரின்னு பல புதிய புதிய வார்த்தைகள் வருது. ஒழுக்கமான நடிகைகளும் இருக்கிறாங்க. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மேல் குற்றச்சாட்டு எழுகிறது.

NNBav

Navya nayar, Bavana

ஆனா அவங்களை ஒழுக்கமா இருக்க வைக்கணும். ஆனா அதைத் தாண்டி ஆசைக்கு இணங்க வைக்கிறாங்க. தனிப்பட்ட ஆசைக்கு ஆசைநாயகியா வைக்கிறாங்க. கிட்டத்தட்ட விபச்சாரியா நடத்துறாங்க. சித்திக் 30 ஆண்டுக்கு மேலா மலையாள சினிமாவுல இருக்காங்க. அடுத்தது மோகன்லால் தலைவரா இருந்து ஏன் வாயைத் திறக்கல. அவருக்கிட்டயும் குற்றச்சாட்டு இருக்கலாம்.

17ல கமிட்டி பார்ம் பண்றாங்க. 19ல கமிட்டி ரெக்கமண்டேஷன் கொடுத்துச்சு. 5 வருஷம் அந்தக் கமிட்டியோட ரிப்போர்ட் ஏன் தூங்கிக்கிட்டு இருக்கு. இதை ஒருத்தர் ஆர்.கே.ரிப்போர்ட் வாங்குறாரு. ஆனா அதுல சில பகுதிகள் மறைக்கப்படுது. ஆனா அரசு அதைக் கெடப்புல போடுது.

ஏன் போடணும்? அதுல இருக்குறது சில முக்கிய நடிகர்கள். பாலியல் ரீதியான விஷயத்தில் பொறுக்கிகள் மாதிரி நடந்துக்கிறாங்க. தன்னோட மனைவி நடிகையா இருந்தாலும் அவர்களது மனைவியை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வரமாட்டார்கள்.

ஆனா அதே நடிகர்கள் புதுசா ஒரு நடிகை வர்றாங்கன்னா வயது வித்தியாசமே இல்லாம மகள் வயது பெண்ணாக இருந்தாலும் அவனுடைய ஆசைக்கு இணங்கணும். பெரிய பெரிய ஸ்டாரா இருக்குறான். அரசியல் பின்புலம் இருக்கு. தொட முடியாது.

சினிமாவுல நடிகைகளின் உதவியாளர்கள், பிஆர்ஓ.க்கள், நடிகையோட அம்மாக்கள், புரொகிராம் மேனேஜர்கள் இவங்க எல்லாம் நடிகைகளோட கற்பை விலை பேசி வித்துக்கிட்டு இருக்காங்க. இது சத்தியமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?si=agIPQLy6a3Kaz8CO&v=RIVGDdP-7hQ&feature=youtu.be

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top