ஸ்லீவ்லெஸ் உடையில் தூக்கிக் கட்டி கிளாமர் காட்டிய நடிகரின் மகள்...
கோலிவுட்டின் பிரபல ஹீரோ லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டாவின் படங்கள் ரசிகர்களிடம் ஹிட் அடித்துள்ளது.
Wed, 6 Jan 2021

கோலிவுட்டில் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துருந்தவர் லிவிங்ஸ்டன். அதைத்தொடர்ந்து, பல படங்களில் நாயகனாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்து கொண்டார். மேலும் கன்னிராசி திரைப்படத்தில் திரைக்கதையும் அமைத்து கொடுத்திருக்கிறார். பெரிய திரையில் இருந்து தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் வலம் வருகிறார். தந்தை மட்டுமல்ல இவரின் மகளும் தற்போது சீரியலின் நாயகியாகி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் கீர்த்தியாக நடிப்பவர் ஜோவிடா. இவர் தான் லிவிங்ஸ்டனின் மூத்த மகள். அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை அம்மணிக்கு ஹாபியாகி இருக்கிறது. இந்நிலையில், ஜோவிடாவின் தற்போதைய பீச் புகைப்படம் பலரிடம் வைரலாகி வருகிறது.