தவெகவில் இணைந்த மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா!..

 
joy

தமிழ் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜாய் கிரிஸில்டா தற்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். சிஎம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவர் இணைந்திருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜை 2வதாக திருமணம் செய்த ஜாய் கிரிஸில்டாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. 2வது மனைவி வேண்டாம் முதல் மனைவி மற்றும் மகன்களே போதும் என மாதம்பட்டி ரங்கராஜ் முடிவெடுத்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து தனக்கான அங்கீகாரத்துக்காக போராடினார். இறுதியாக டிஎன்ஏ டெஸ்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தான் என உறுதியானது. 

திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஆடை வடிவமைப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ஜாய் க்ரிசில்டா. நவீன மற்றும் பாரம்பரிய ஆடை வடிவமைப்புகளை இணைத்து தனித்துவமான பாணியை உருவாக்கிய அவர், ஃபேஷன் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். சமூக ஊடகங்களிலும் அவரது படைப்புகள் பரவலாக கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சமூகப் பணிகளிலும் பொதுமக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த ஜாய் க்ரிசில்டா, அரசியல் மூலமாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. கட்சியின் கொள்கைகள் மற்றும் இளைஞர்களுக்கான பார்வை தன்னை ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், ஜாய் க்ரிசில்டாவின் வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவரது அறிமுகம் கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அரசியலில் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ஜாய் க்ரிசில்டா, எதிர்காலத்தில் கட்சியின் சமூக மற்றும் மகளிர் சார்ந்த பணிகளில் முக்கிய பங்கு வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சினிமா மற்றும் ஃபேஷன் உலகில் வெற்றி கண்ட அவர், அரசியல் களத்திலும் தனது தனித்துவமான தடத்தை பதிப்பாரா என்ற கேள்வி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Tags

From Around the web