ஹே பொண்டாட்டி.. நீ எனக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட்!.. வீடியோவை பகிர்ந்த ஜாய் கிரிசில்டா!..
பிரபல சமையல் கலைஞராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிரிசில்டாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தும் அவரின் காதலை ஜாய் கிரிசில்ட்டா ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில் அவரை ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்ததாக தெரிகிறது.
எனவே, மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் எடுத்துக் கொண்ட திருமணம் தொடர்பான மற்றும் நெருக்கமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களை பகிரத் துவங்கினார் ஜாய் கிரிசில்டா. அதோடு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏற்க மறுப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல் நிலத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

‘ஒருபக்கம் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் 'அந்த குழந்தைக்கு நான் தந்தையில்லை.. டிஎன்ஏ சோதனைக்கு தயார்’ என நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்கூறினார். ஆனால் இதுவரை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படவில்லை. ஒரு பக்கம் தன்னை சமூக வலைதளங்களில் தொடர்புபடுத்தி கருத்துக்களை கூற ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க வேண்டுமென மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ரொமான்ஸோடு பேசி தனக்கு வெளியிட்ட புதிய வீடியோவை இப்போது ஜாய் கிரிசில்ட்டா பகிர்ந்துள்ளார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ‘லவ் யூ பொண்டாட்டி.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. நீ வந்ததுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையில் சந்தோஷமே வந்திருக்கு. நீ எனக்கு கடவுள் கொடுத்த பரிசு’ என்றெல்லாம் ரொமான்டிக்காக பேசி அவருக்கு முத்தமும் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
அந்த வீடியோவை பகிர்ந்து ‘ஹே புருஷா.. டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க தைரியம் இல்லையா?’ என கேட்டு நக்கலடித்திருக்கிறார் ஜாய் கிரிசில்டா. மேலும் ‘இது லவ்ல இருந்த போது எனக்கு அனுப்பினது’ என்றும் பதிவிட்டிருக்கிறார்.
