ஏ பொண்டாட்டி…லவ் யூ… மிஸ் யூ… மாதம்பட்டி ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட 2வது மனைவி!..
Madhampatty Rangaraj: குக்கிங் இண்டஸ்ட்ரியில் தொழிலதிபராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் இல்லத் திருமண விழாக்களில் இவரின் டீம்தான் உணவை தயாரித்து கொடுக்கிறார்கள். பலவிதமான உணவு வகைகளை தயாரிப்பதில் இவர் எக்ஸ்போர்ட். இது தொடர்பாக பல வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டும் இவர் பிரபலமானார்.
மேலும் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆடை வடிவமைப்பு கலைஞரான ஜாய் கிரிசில்டாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், திருமணம் முடிந்து விட்டதாகவும் தான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படங்களோடு பதிவு போட்டார் ஜாய் கிரிசில்டா.
அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஜாய். மேலும் தன்னை சந்திப்பதை தவிர்ப்பதாகவும், திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னுடன் வாழ விரும்பவில்லை என அவர் சொல்வதாகவும் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். இந்த புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு வீடியோ காலில் பேசியதை வெளியிட்டு அதற்கு ‘மாதம்பட்டி ரங்கராஜ் அலப்பறைகள். என இதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ஜாய். மேலும் ‘மேலும் வயிற்றில் தனது குழந்தையை சுமக்கும் ஒரு பெண்ணுக்கு ஒருவரால் துரோகம் செய்ய முடிகிறது என்றால் அவர் யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்வார் என பதிவிட்டு இருக்கிறார்’. அதில் ‘ஏ பொண்டாட்டி லவ் யூ.. மிஸ் யூ’ என மாதம்பட்டி ரங்கராஜ் காதலோடு கொஞ்சும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
