மாதம்பட்டி உனக்கு மனசாட்சி இல்லையா?!. ஜாய் கிரிசில்டா இப்படி பொங்கிட்டாரே!...
திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிசில்டா பிரபல சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பக்கம் ரங்கராஜ் தொடர்பான பல விஷயங்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
ஏற்கனவே இருவரும் நெருக்கமாக உள்ள மற்றும் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதோடு தற்போது ரங்கராஜ் தன்னை சந்திக்க மறுப்பதாகவும், அவரை சந்திக்க சென்றால் அடித்து துன்புறுத்ததாகவும் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டு ‘குழந்தை அவரின் அப்பாவை போலவே இருக்கிறது. ஆனால் அப்பாவாக இருப்பதற்கு அவருக்கு தகுதி இல்லை’ என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில்தான், ஜாய் கிரிசில்டாவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால் டி.என்.ஏ சோதனை தேவையில்லை என அறிவித்து குழந்தையின் பராமரிப்பு செலவை ரங்கராஜ் ஏற்க வேண்டும் எனவும், அதோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது.

ஆனால் இதை மறுத்து ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் இன்று காலை அறிக்கை வெளியிட்டார். அதில் ‘குழந்தைக்கு அப்பா நான்தான் என மகளிர் ஆணையத்தில் நான் வாக்குமூலம் அளிக்கவில்லை. என்னுடன் பழகி அது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதால் ஜாய் கிரிசில்டாவுடன் திருமணம் நடந்தது.
என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக என்னை மிரட்டி ஜாய் கிரிசில்டா திருமணம் செய்து கொண்டார். டிஎன்ஏ சோதனைக்கு நான் ஒருபோதும் மறுக்கவில்லை. அப்படி அந்த குழந்தை என்னுடையது என நிரூபிக்கப்பட்டால், குழந்தையை வாழ்நாள் முழுவதும் நான் கவனித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறேன். அனைத்து ஆதாரங்களையும் அங்கு சமர்ப்பிப்பேன்’ என சொல்லி இருந்தார்.
இதனால் கோபப்பட்ட ஜாய் கிரிசில்டா டிவிட்டர் பக்கத்தில் ‘டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் என சொன்னவர் இப்போது சோதனைக்கு தயார் என்கிறார். மாதம்பட்டி ரங்கராஜும், அவரின் குடும்பத்தினரும் எனக்கு மிகுந்த மனவலியை கொடுக்கிறார்கள். குழந்தை NICU-வில் இருக்கும் நிலையில் இது போன்ற அறிக்கை தேவையா?.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனசாட்சியே இல்லையா/’ என பொங்கி இருக்கிறார்.
