×

பூஜை அறையில் சாமிகளுடன் ஜூலி...  இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா...?

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகிய ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்     மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை.

 

இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்து வந்த நிலையில் தற்ப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஜூலியை ரசிக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் ஜூலியின் வெறித்தனமான  ரசிகர் ஒருவர் அவரது புகைப்படத்தை பூஜை அறையில் சாமியாகவே வைத்து கும்பிடுகிறார். மேலும்,  அவரின் செல்ஃபோன் கேஸில் கூட ஜூலி போட்டோவை தான் வைத்துள்ளார். இதனை கண்டு நம்ம ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகனா என வாய் பிளந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News