ஜூலை 10-ஆம் தேதி தமிழில் ரிலீஸ் ஆகும் மூன்று திரைப்படங்களின் லிஸ்ட்!

 
Idhayam murali love oh love mudharkanal

திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஜானர்களில் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. அப்படி வருகிற ஜூலை 10-ஆம் தேதி தமிழில் மூன்று திரைப்படங்கள் வெளியாகப்போகிறது. அதன் லிஸ்ட் இதோ...

1.இதயம் முரளி :

Idhayam murali

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் தான் 'இதயம் முரளி'. இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், டிராவிட், ஏஞ்சலின், நட்டி, தமன், நிஹரிகா, சுதாகர், அஞ்சு குரியன், ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

2.லவ் ஓ லவ் :

Love oh love

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாக துர்கா ஜோடியாக நடித்திருக்கும் படம் தான் 'லவ் ஓ லவ்:. இதில் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர், ரம்யா, அஸ்வத், சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

3.முதற்கனல் :

Mudharkanal

ஆர்.வெங்கடரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் 'முதற்கனல்'. இதில் அஷ்வின், ராஜேஷ், ருஹானி, ஹரிஹரன், யோகேஷ், இலக்கியா, ராமசாமி, தனுஜா, லக்ஷ்மணன், ருக்மணி, தீபா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Tags

From Around the web