ஜூலை 3-ஆம் தேதி தமிழில் ரிலீஸ் ஆகும் மூன்று திரைப்படங்களின் லிஸ்ட்!

 
Nagabandham gatta kusthi 2 dark

ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தியேட்டர்களில் பல படங்கள் வந்த வண்ணமிருக்கிறது. அப்படி வருகிற ஜூலை 3-ஆம் தேதி தமிழில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுகிறது. அதன் லிஸ்ட் இதோ...

1.கட்டா குஸ்தி 2 :

Gatta kusthi 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடியாக நடித்திருக்கும் படம் தான் 'கட்டா குஸ்தி'. இதில் காளி வெங்கட், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், முனிஷ்காந்த், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

2.டார்க் :

Dark

கல்யாண்.கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் படம் தான் 'டார்க்'. இந்த படத்தில் அஞ்சனா நேத்ரன், கே.பாக்யராஜ், VTV கணேஷ், நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

3.நாகபந்தம் :

Nagabandham

அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா நடித்திருக்கும் படம் தான் 'நாகபந்தம்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், நபா நடேஷ், ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

From Around the web