Categories: Cinema News latest news

திரை உலகைக் கலக்கப் போகும் இன்றைய படங்கள்… ஜெயிக்கப் போவது யாரு?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மொக்கைப் படங்கள் இல்லாமல் கொஞ்சம் பார்க்கும்படியாக இன்று (ஜூன் 7) தமிழ்ப்படங்கள் களம் காண இருக்கின்றன. அவற்றில் என்னென்ன படங்கள், ரசிகர்கள் மத்தியில் எப்படியான எதிர்பார்ப்புகள் மற்றும் படத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.

அஞ்சாமை

நீட் தேர்வு தான் படத்தின் மையக்கரு. இந்தத் தேர்வு எப்படி வந்தது? அதன் உண்மைச்சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். நீட் தேர்வு தேவைதானா என்று அலசுகிறது. விதார்த், வாணி போஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.பி.சுப்புராம் இயக்கி உள்ளார்.

வெப்பன்

Weapon

சத்யராஜின் ஆக்ஷன் படம். இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் குகன் சென்னியப்பன். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

ராஜீவ் மேனன், தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மாயா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட ரோலில் சத்யராஜ் நடித்து அசத்துகிறார்.

ஹரா

நடிகர் மோகனின் கம்பேக் படம் ஹரா. சமூக பிரச்சனைகளை தனி ஒருவன் தட்டிக் கேட்கும் கதை. இது ஒரு ஆக்ஷன் படம். மோகனுடன் இணைந்து அனுமால், யோகிபாபு, சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

தண்டு பாளையம்

சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு கிரைம் திரில்லர் படம். கொலை, கொள்ளை போன்றஉண்மைச்சம்பங்களை அடிப்படையாகக் கொண்டது. டைகர் வெங்கட் தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார்.

இனி ஒரு காதல் செய்வோம்

இளம் காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கலை மையமாகக் கொண்டு வந்துள்ள படம். இது ஒரு ரொமான்டிக் படம் என்பதால் இளம் ரசிகர்கள் கூட்டம் கூடும். புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் ஹரிஹரன்.

இந்தியன்

Indian 1

கமல், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு நடிப்பில் ஷங்கர் 1996ல் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் இந்தியன். இன்று ரீ ரிலீஸாகிறது. 2கே கிட்ஸ்களுக்கு இந்தப் படம் புது படம் என்பதாலும் அடுத்த மாதம் இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 வருவதாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள், கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள் கலக்கலாக இருக்கும்.

சத்தியபாமா

காஜல் அகர்வாலின் 60வது படமான சத்தியபாமா. இந்தப் படம் தெலுங்கில் வெளியாகிறது.குழந்தை பெற்ற பிறகும் டிப் டாப் போலீஸ் உடையில் வெளுத்துக் கட்டுகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது.

இந்தப் படத்தில் அம்மணி சண்டைக்காட்சிகளிலும் வெளுத்து வாங்கப் போகிறார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v