Categories: Cinema News latest news

டி.எஸ்.பாலையா மகன் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம்!.. உண்மையை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் ஒரு பழம்பெரும் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் டி.எஸ். பாலையா. சிவாஜி , எம்ஜிஆர் இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக பாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதில் இவரை விட தலைசிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது. ஆனால் சிவாஜியின் நடிப்பை பற்றி தன் வீட்டில் அதிகமாக பேசிக் கொண்டே இருப்பாராம் டி.எஸ்.பாலையா.

இந்த நிலையில் இவருடைய மகனும் நடிகருமான ஜூனியர் பாலையா சமீபத்தில்தான் காலமானார்.ஆனால் அவருடைய அப்பா சினிமாவில் செய்த சாதனையை ஜூனியர் பாலையாவால் செய்ய முடியவில்லை. ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் குணச்சித்திரவேடங்களிலுமே நடித்து வந்தார். இந்த நிலையில் டி.எஸ். பாலையாவின் இன்னொரு மகனான ஜெய் பாலையா ஜூனியர் பாலையாவை பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார்.

அதாவது சினிமாவில் பெரிய சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவாய் என கண்டதையும் சொல்லி ஜூனியர் பாலையாவை மதம் மாற்ற வைத்தார்களாம் சில பேர். அதில் இருந்தே வீட்டில் உள்ளவர்களுக்கும் ஜூனியர் பாலையாவுக்கும் இடையே பெரிய பிரச்சினை உருவாகியிருக்கிறது. பெரும் முருக பக்தராக இருந்தவர் டி.எஸ். பாலையா. அதுமட்டுமில்லாமல் ஜூனியர் பாலையாவும் ஐய்யப்ப பக்தாராம்.

ஆண்டுதோறும் மாலை போட்டு ஐயப்பனை வணங்கி வருவார்களாம். குருசாமியாய் இருந்தவராம். இப்படி இருந்தவரை இருந்த இடமே தெரியாமல் மாற்றி விட்டார்கள் என்று ஜெய் பாலையா கூறினார். சோதனைக்கு பின் தான் சாதனை. அதற்காக இப்படியெல்லாம் மாறித்தான் சாதிக்கனுமா? அங்கு போனாலும் அவர் என்ன பெரிய சாதனை செய்துவிட்டார்? என அவருடைய சகோதரர் ஒரு பேட்டியில் புலம்பியிருக்கிறார்.

ஜெய் பாலையாவை பொறுத்தவரைக்கும் ஒரு பாடகராம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம். இன்று என் வாழ்க்கை திருப்தியாக சென்று கொண்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini