×

ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து - வைரலாகும் புகைப்படம்

 
jumior

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் என அழைப்படுபவர் தாரகராம். ஆனால், அவரின் முழுப்பெயர் யாருக்கும் தெரியாது. ஜூனியர் என்.டி.ஆர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். தெலுங்கில் கடவுளாக கொண்டாடப்பட்ட என்.டி.ஆரின் பேரன் ஆவார். 

தெலுங்கில் 25 படங்களுக்கும் மேல் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து ராம்சரணும் நடித்து வருகிறார்.  

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால், கொரோனா பரவல் கடினமாக இருக்கும் சூழ்நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழு சார்பாக ராஜமவுலி பகிர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News