×

“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது "கர்ணன்"  பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தனுஷின் "கர்ணன்" படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்.

 

’பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்ப்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும்  இப்படத்தின்  டைட்டில் போஸ்டர்  தனுஷின் பிறந்த நாளாகிய இன்று அட்டகாசமாக வெளிவந்துள்ளது.  இந்த டைட்டில் போஸ்டரில் ”நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News