கொள்ளை அழகில் ஜோதிகா... பாலிவுட் சென்றதும் ஆளே மாறிட்டாங்க!

 
jyothika

நடிகை ஜோதிகா: 

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை ஜோதிகா வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

தமிழ் சினிமாவில் 1999 இல் வெளிவந்த வாலி திரைப்படம் தான் இவரது முதல் திரைப்படம். இவர் முதலாவது நடித்த திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

செக்கென்ட இன்னிங்ஸ்: 

jyothika

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 36 வயதினிலே, காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது ஹிந்தி சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜோதிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

யங் லுக்கில் ஜோதிகா : 

இதில் புது ஜோடி போலவே இன்னும் பாக்குறதுக்கு அதே இளமையோடு இருக்காங்க என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்த தோற்றத்தில் மீண்டும் பழைய ஜோதிகாவை பார்ப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

Tags

From Around the web