ஜோதிகா நடித்த ஒரே ஒரு ‘சீன்’!.. அதையும் இப்படி லீக் பண்ணிட்டாரே சூர்யா!..
சீன் படத்தில் ஜோதிகா கேமியோவாக தோன்றும் தருணம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், டொவினோ தாமஸ் கேமியோவுக்கு நன்றி தெரிவித்தது போல தற்போது படத்தின் தயாரிப்பாளரும் தனது மனைவியுமான ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா அந்த ஸ்பாய்லர் காட்சியை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.
அதில், அனைத்து திரையரங்குகளிலும், அனைத்து மொழிகளிலும் இந்தக் காட்சிக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி என்றும், ஜோதிகாவையும் தங்களது பயணத்தையும் ரசிகர்கள் அன்புடன் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#Mylove ❤️ #Imaginoromancophilia #Jyotika Thank you all, for the applause in all screens, in all theatres, across every language - thank you for celebrating her, us and our journey with so much love. ❤️🙏 https://t.co/X4kcgAGi7d
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2026

ஏற்கனவே படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸும் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இப்படி ஒவ்வொரு சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களையும் படக்குழு வெளியிட்டு வருவது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சீன் திரைப்படம் 260 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், இந்த வாரம் வரை தான் தியேட்டரில் ஓரளவுக்கு ஓடும் என்கின்றனர். விரைவில் ஓடிடியில் வெளியாகி விடவும் காத்திருக்கிறது.